Monday, December 21, 2009

இயற்கை

நான் அடிமை உனக்கு
நீ அழகாய் இருப்பதால்
கடவுள் உன்னை மட்டும்
அழகாய் படித்ததன் நோக்கம் தான் என்ன...?
செயற்கையே அறியாத உன்னை
இயற்கை என்கிறது மனிதம்
உன்னை அழிக்க வந்த மனிதனையே
நம்பும் நீ ஏமாளியா...?
துரோகியையும் அரவணைக்கும்
நீ புத்திசாலியா...?

அழிந்துவரும் இனங்கள்
தெரியும் நமக்கு
அழிந்து வருவது நீ தான்
என்பது எத்தனை பேருக்கு
தெரியும்
இனங்கள் யாவுமே
உன் சேர்க்கை
என்பதை அறியும்
ஓரிரு மனிதங்கள்
திக்குத் திணறுகின்றன

உன்னைக் காப்போமா என்ற ஏக்கத்துடன்
விடை தேடியும் கிடைக்காது
நீ பதில் சொல்லும் வரை....

Saturday, December 19, 2009

தொடர்பு

பிரிவு
சந்திப்பு முடிவடைய - நீ
எடுத்த முடிவு நம்மை சேர்க்க
நான் மட்டும் பிரிவதென முடிவேடுத்தேனே
உன் நன்மைக்காகவா..........?

சண்டை
சண்டைக்கு தீர்வு காண
சண்டை பிடிக்கின்றன
பல உள்ளங்கள்
வெளியுலகம் அறியாத
இந்த மௌனச் சண்டை
வெளி வராத வரை
விடையேது சண்டைக்கு.........?

மோதல்
மனைகளின் மோதல்
நாவிலே புரள
உருவெடுக்கும் போர்
நாளடைவில் மடுவாகவோ? மாலையாகவோ?

ஏமாற்றம்
எதிர்பாராத சந்திப்பு
எதிர்பாராமலே முடிவடைந்தது
ஏமாற்றம் இது என்றால்
ஏமாளி நீ
காரணத்தை அறிய முற்படுகிறாயா
மனிதனாகிறாய் இவ்வுலகில்....

பி.கு: இந்த கவிதை சீ சீ கிறுக்கல் தொகுப்புக்கு தொடர்பு என்று பெயர் வைத்ததன் காரணம், இந்த பிரிவு, சண்டை, மோதல், ஏமாற்றம் என்ற நான்கிற்கும் தொடர்பு இருப்பதால் தான்.
வாழ்க்கையில் எல்லோருக்கும் வருவது
காதலில் வருவது
நட்பில் வருவது
குடும்பத்தில் வருவது
வேட்டிக்கை வருவது
என்று பல இடங்களில் இந்த நன்கு விடயங்களும் தொடர்பு படுகின்றன...........
காதல் விடயத்தில் பலர் எனக்கு எதிரியாக வரலாம் (காதலில் வருவது என்று சொல்லி இருந்தேனே, அதைச் சொன்னேன்..)
அது வேறு ஒன்றுமல்ல......... இங்கு நான் தோல்வி என்றது காதல் தோல்வியில் முடியும் என்பதால் அல்ல; காதலில் ஏற்படும் பல வேளைகளில் தோல்வியில் முடிவடைகின்றன (என் அனுபவம் அல்ல, பார்த்த உண்மை)
இதே போல தான் ஏமாற்றமும் கூட..................
மோதல் கீதல், சண்டை சச்சரவு எல்லாம் இங்க சகஜமப்பா...........

Thursday, November 26, 2009

ஒரு வரியில் யாவும்

அம்மா
எதற்காகவும் இழக்க விரும்பாத உறவு

அனுபவம்
ஒருவகைக் கல்வி வழிநடத்துகிறது நம்மை.

இணையம்
தொடர்பாடல் வலை, உணர்வு வலியாகிறது இன்று

இயற்கை
அழியும் போதும் அழகாகும் தனியுலகம்

இறப்பு
புரியாத புதிர்

உணவு
சொந்த வீட்டில் மட்டும் உருப்படியாக; பிற வீட்டில் பட்டினியாக

உயிர்
இருக்கிறது எங்கோ

கடவுள்
காணாத சக்தி நமக்கு மேலே

கல்வி
ஏழையையும் செல்வந்தனாக்கும் வள்ளல்

கனவு
இங்கு கூட நின்மதி இல்லை

காதல்
காமத்தின் போர்வையாக இன்று சிலரிடம்

கௌரவம்
இதன் குறைவு பிரச்சனையின் ஆரம்பம்

சமயம்
வழிநடத்தவே தவிர சுதந்திரத்தைப் பறிக்கவல்ல

சுதந்திரம்
யாவரும் விரும்பும் ஒன்று சிலரிடம் மாட்டி தவிக்கிறது இன்று

நட்பு
அடைந்தவன் அதிஷ்டசாலி; அடையாதவன் துரதிஷ்டசாலி

பணம்
இறைவளை வணங்கவே கேட்க்கப்படும் கூலி

பிறப்பு
அறியாத ஆரம்பம்

மானம்
மீளப் பெற முடியாது சென்றால்

மொழி
பணக்காரனையும் ஏழையாக்கும் திறமைசாலி

வாழ்க்கை
கற்பதற்கு ஒருவழி வழங்கப்படுகிறது இறைவனால்

Monday, November 23, 2009

ஒரு காதல் காலமிது...

என்னடா பாடலுடன் தொடக்கிறாளே என்று பார்க்காதீங்க...........
இவளின் சின்னக் கிறுக்கல் இப்பதிவுலகில்...

காதலின் விளையாட்டில்
தூக்கமின்மை வருடுகையில்
மெல்ல மூடும் இமைகளை
கலைக்கின்றன தவறிய அழைப்புகள்

வெட்டிப் பேச்சுகள்
தெய்வங்களாகிய காலத்தில்
மனம் திண்டாடுகிறது
நீ அருகிலிருந்தால் என்ற நப்பாசையுடன்

சந்திப்புகள் வெறுப்பூட்டின
உன்னைப் பார்க்காத கண்கள்
மற்றவர்களைப் பார்ப்பதா என்று
தேடுகின்றன கண்கள் உன்னை
கிடைப்பாய என்ற ஏக்கத்துடன்..............?

பி.கு: இது என் சொந்தப் புலம்பல் என்று நினைத்தால் அதற்கு நான் பொறுப்பல்ல. ஆனால் இவை யாவும் பல காதலர்களுக்குப் பொருந்தக் கூடியவை... அனுபம் இருக்க. பகிருங்க இங்க......... உங்களுடைய சொந்த அனுபவம் என்று என்று சொல்ல வரல்லங்க........

Friday, November 20, 2009

அண்ணாவுக்கு


அண்ணாவினுடைய பிறந்தனாளுக்கனதே இந்தப் பதிவு... இரண்டாவது பதிவாக இருக்கும் என்று எதிபார்க்கவில்லை...

சண்டைகள் விளையாட்டான காலத்தில்
இன்று உன் நினைவுகளுடனே...
ஆயிரம் நான் பேசி அம்மாவிடம்
எச்சு வாங்கிய காலம்
தாண்டியது இரு வருடங்களாக...


நாமாகவே தீர்மானிக்க முடியாத உறவில்
சகோதர உறவும் ஒன்றாம்...
நானே தீர்மானித்திருந்தால்,
உன்னை இழந்திருப்பேன் இன்று......
தவறி கிடைத்த உறவு தவறாது இனி..

தவற விடமாட்டேன் என்றும் நம் சகோதர உறவை.....
என் இனிய பிறந்தநாள் நல வாழ்த்துக்கள் அண்ணா...

Wednesday, November 18, 2009

புதுவரவு புதிய மொட்டாக...

பதிவுலக அனைவருக்கும் வணக்கங்கலளுடன் இந்த சிறியவளும் இங்கு..
தமிழர் அரிதாக இருக்கும் இடத்தில் இருப்பதால், இணையத்தில் வாசிக்கத் தொடங்கினேன், அதன் விளைவாக இன்று நானும் இந்த இணையத்தில்... என்னுடைய எழுத்துகளையும் இவ்வுலகம் ஏற்றுக் கொள்ளக் ஏற்றுக் கொள்ளும் என்ற நம்பிக்கையுடன் துளிவிட இருக்கின்றன என் பதிவுகள். பதிவுலகில் நானும் ஒருத்தியாக இருக்க விம்புகிறேன்; நீங்கள் யாவரும் இருப்பதால்....
கற்பவை யாவுனும்
அனுபவம் ஆவதில்லை
அனுபவம் யாவுமே
கல்வியாகிறது இவ்வுலகில்...............

என் எழுத்தில் தகைமை உங்களால் தீமானிக்கப் படுகிறது இங்கு...
நன்றி.....
முதல்ப் பதிவில் அதிகம் அலட்டவில்லை (இனி அலட்டமாட்டேன் என்ற முடிவுக்கு வர வேண்டாம்..)

பி.கு:

தமிழிலான ஆர்வம்
இழுத்தது என்னை இங்கு
பண்டிதையல்ல நான் தமிழில்
அறிவேன் ஆனால் என் மொழியை

தாய் மொழி தமிழ் என்பதில் பெருமையடையும் நான் என் பெற்றோர்களையும் மதிக்கத் தயங்காதவளாக, என் புனை பெயர் அவர்களாகவே இருக்க விரும்பியதால், இந்தப் பெயரும் உருவெடுத்தது.
இந்தப் புனை பெயரே இன்க்கடலில் நிலை பெரும் முத்தானாள் அதிச்டசாளியகவே இருப்பேன் என்றும் இந்த பதிவுலகில்...