அம்மா
எதற்காகவும் இழக்க விரும்பாத உறவு
அனுபவம்
ஒருவகைக் கல்வி வழிநடத்துகிறது நம்மை.
இணையம்
தொடர்பாடல் வலை, உணர்வு வலியாகிறது இன்று
இயற்கை
அழியும் போதும் அழகாகும் தனியுலகம்
இறப்பு
புரியாத புதிர்
உணவு
சொந்த வீட்டில் மட்டும் உருப்படியாக; பிற வீட்டில் பட்டினியாக
உயிர்
இருக்கிறது எங்கோ
கடவுள்
காணாத சக்தி நமக்கு மேலே
கல்வி
ஏழையையும் செல்வந்தனாக்கும் வள்ளல்
கனவு
இங்கு கூட நின்மதி இல்லை
காதல்
காமத்தின் போர்வையாக இன்று சிலரிடம்
கௌரவம்
இதன் குறைவு பிரச்சனையின் ஆரம்பம்
சமயம்
வழிநடத்தவே தவிர சுதந்திரத்தைப் பறிக்கவல்ல
சுதந்திரம்
யாவரும் விரும்பும் ஒன்று சிலரிடம் மாட்டி தவிக்கிறது இன்று
நட்பு
அடைந்தவன் அதிஷ்டசாலி; அடையாதவன் துரதிஷ்டசாலி
பணம்
இறைவளை வணங்கவே கேட்க்கப்படும் கூலி
பிறப்பு
அறியாத ஆரம்பம்
மானம்
மீளப் பெற முடியாது சென்றால்
மொழி
பணக்காரனையும் ஏழையாக்கும் திறமைசாலி
வாழ்க்கை
கற்பதற்கு ஒருவழி வழங்கப்படுகிறது இறைவனால்
Thursday, November 26, 2009
Subscribe to:
Post Comments (Atom)
ம்..பிரமாதம்....
ReplyDelete//காதல்
காமத்தின் போர்வையாக இன்று சிலரிடம்//
"இன்று" அப்ப அன்று இல்லையா ? ..."சிலரிடம்" அப்ப எல்லாரிடமும் இல்லையா ?
பிடிச்சது
//அம்மா
எதற்காகவும் இழக்க விரும்பாத உறவு//
நான் ஏற்றுக்கொள்ளாதது
//சமயம்
வழிநடத்தவே தவிர சுதந்திரத்தைப் பறிக்கவல்ல//
//கல்வி
ஏழையையும் செல்வந்தனாக்கும் வள்ளல்//
"//காதல்
ReplyDeleteகாமத்தின் போர்வையாக இன்று சிலரிடம்//
"இன்று" அப்ப அன்று இல்லையா ? ..."சிலரிடம்" அப்ப எல்லாரிடமும் இல்லையா ?"
அன்றைய நிலை எனக்குத் தெரியாதே, இன்று நான் வாழ்வதால் இன்றைய நிலை தெரிகிறது... சிலரிடம் என்று தான் நினைக்கிறேன்; சரியாக தெரியல்ல (அறிந்தால் சொல்லவும்).
பிடிச்சது
//அம்மா
எதற்காகவும் இழக்க விரும்பாத உறவு//
எனக்கும் மிகபிடித்தது
"நான் ஏற்றுக்கொள்ளாதது
//சமயம்
வழிநடத்தவே தவிர சுதந்திரத்தைப் பறிக்கவல்ல//
//கல்வி
ஏழையையும் செல்வந்தனாக்கும் வள்ளல்//"
ஏற்றுக் கொள்ளாமைக்கு காரணம்?
கல்வி பற்றிய கருத்து ஏற்றுக் கொள்ள முசியாமல் இருக்கலாம்; காரணம் அறிவேன் (தவறுக்கு மன்னிக்கவும்).
சமயம் சுதந்திரத்தைப் பரிக்காவிட்டலும், சமயத்தைப் பயன்படுத்தி சுதந்திரம் பறிக்கப் படுகின்றது என்பது உண்மை. அதனால் சமயத்திப் பற்றிய என் கருத்தும் பொய்யாக இருக்கலாம்..
என்னையும் எனது கருத்துக்களையும் மதித்து எழுதியதால், பிறரை நினைக்கவில்லை. இனியாவது உலகை நினைத்து எழுத்து விபு..(இது எனக்கு நானே..)
/வாழ்க்கை
ReplyDeleteகற்பதற்கு ஒருவழி வழங்கப்படுகிறது இறைவனால்/
அத்தனையும் நல்ல வரிகள்.. தொடர்ந்து எழுதுங்கள். வாழ்த்துக்கள்
http://niroodai.blogspot.com
நன்றி...
ReplyDelete