Monday, November 23, 2009

ஒரு காதல் காலமிது...

என்னடா பாடலுடன் தொடக்கிறாளே என்று பார்க்காதீங்க...........
இவளின் சின்னக் கிறுக்கல் இப்பதிவுலகில்...

காதலின் விளையாட்டில்
தூக்கமின்மை வருடுகையில்
மெல்ல மூடும் இமைகளை
கலைக்கின்றன தவறிய அழைப்புகள்

வெட்டிப் பேச்சுகள்
தெய்வங்களாகிய காலத்தில்
மனம் திண்டாடுகிறது
நீ அருகிலிருந்தால் என்ற நப்பாசையுடன்

சந்திப்புகள் வெறுப்பூட்டின
உன்னைப் பார்க்காத கண்கள்
மற்றவர்களைப் பார்ப்பதா என்று
தேடுகின்றன கண்கள் உன்னை
கிடைப்பாய என்ற ஏக்கத்துடன்..............?

பி.கு: இது என் சொந்தப் புலம்பல் என்று நினைத்தால் அதற்கு நான் பொறுப்பல்ல. ஆனால் இவை யாவும் பல காதலர்களுக்குப் பொருந்தக் கூடியவை... அனுபம் இருக்க. பகிருங்க இங்க......... உங்களுடைய சொந்த அனுபவம் என்று என்று சொல்ல வரல்லங்க........

2 comments:

  1. விபு.....அருமையான வரிகள்..தரமாக இருக்கின்றன ......இவை காதலர்களிற்கு பொருந்தும் எண்டு தான் நானும் நினைக்கிறேன்....

    //இது என் சொந்தப் புலம்பல் என்று நினைத்தால் அதற்கு நான் பொறுப்பல்ல//
    எல்லாத்துக்கும் பொறுப்பு அந்த அந்த அந்த இளமைக்காலமும்.....அந்த அந்த அந்த இளை..............லொல்..லொல்...lol..lol

    ReplyDelete
  2. தரமாக இருக்கிறது என்று நீங்க மட்டும் தான் சொல்றீங்க. அதுவும் ஒரு கவிதைப் புயலிடமிருந்து வந்ததால், கொஞ்சம் சந்தோசமாக இருக்கிறது..
    நன்றி வருகைக்கும் பின்நூட்டளுக்கும்....
    //இவை காதலர்களிற்கு பொருந்தும் எண்டு தான் நானும் நினைக்கிறேன்...//

    காதல் கவிதை காதலர்களுக்கு தான் பொருந்தும்; இதுவும் இரு காதல் கவிதை சீ சீ சீ, காதல் கிறுக்கல். ஏன் என்றால் காதலிக்காதவர்களுக்கு இதைச் சொல்லப் போய் நான் அடி வாங்கக் கூடாது பாருங்க. அதுக்கு தான்.

    ReplyDelete